. . எங்கள் பாரதி
எட்டயபுரம் தந்த எழில் கவி பாரதி
....எங்கள் பாரதம் தழைக்க எழுந்த பூபதி
பாட்டினில் பரவசம் தந்தான் .....பண்பினை இசையினில் கலந்தான்
எட்டாத துறையில்லை பொருள் இல்லை
.....ஏட்டினில் அனைத்தையும் பாடி வைத்தான்
கொட்டும் அருவி என கவிதை மழை
....குளிர்விக்க நாளும் பொழிந்தான்
... 2 கலையை காட்சியை கண் முன் நிறுத்தினான்
காணாத லட்சிய பாதை வகுத்தான்
மலையை அருவியை மாங்குயிலை பாடினான் ....மண்ணில் பெண்மையை போற்றினான்
சிலையான மாந்தர் சிந்தனையை தூண்டினான் .
....சுதந்திர கனலை மூட்டி வளர்த்தான்
தலையான பாரதத்தை தரணியில் போற்றினான் ....
.....தலைவன் கனவு இன்று நினைவாக மாறியது!
இன்று பாரதி பிறந்த நாள்
பாரதியை போற்றுவோம்
ராதா கவி