இனிய திருமணநாள்
இருபத்துஏழு ஆண்டுகள் இணைந்த இருமலர்கள்
இன்றும் மணந்தரும் இனிய திருமணநாள்
ஒருமித்த கருத்துக்கள் ஒராயிரம் புதுமைகள்
ஒதுங்கி நிற்காது ஒளியூட்டிடும் பணிகள்
கருத்தோடு தொழில்முனைவு கணமேனும் ஒய்வின்றி
கனிவோடு சுற்றமோடு கலந்திடும் புதுமலர்கள்
திருமாலும் திருவுமென தேடிச்செல்லும் உறவாகி
தேர்ந்து முன்பின தலைமுறைக்கு பாலமாகி
விளங்கும் சுடர்களே வானளவு ஒளிவீசி
விரைந்து செயலாற்றி விந்தைகள் படைத்திடுக
உளங்கனிய ஒருமகளை உன்னத சேவைக்கும்
உயர்வுக்கு ஒருமகனை ஊக்குவிக்கும் பெற்றோராகி
களங்காணும் கவிதைகளே! காலமெலாம் போற்றும்
காவியம் படைத்திடுக! கையிலெடுத்த தூரிகையால்
தளங்கண்டு துணிவோடு தீட்டிடுக! தரணியில்
தீபமாய் ஒளிதருக தாயின் நல்லாசிகள்!
8.12.2016
ராதாகவி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக