கந்தா காத்திடுவாய்!
நெருப்பில் பிறந்து நீரினில்
கலந்து
நங்கையர் கைகளில் நளினமாய் வளர்ந்து
மருவி மகிழ்ந்து மாதவள்
அணைக்க
மூவிரு முகமோடு முருகனாகி வந்தவனே
குருவே குகனே குன்றில்
குடியேறி
குறமகள் தன்னோடு குஞ்சரியை மணந்தவனே!
கருவினில் தோன்றி கலங்கிடும்
எந்தனை
கனகவேல் கொண்டு காத்திட வருகவே!
ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக