கந்தசஷ்டி முருகா
கார்த்திகை பெண்கள் கைவளர்ந்த
குமரா
பார்வதி கைசேர்த்த பாலகனே
சரவணா
ஆறுமுகம் ஒன்றான ஆதிமூல
கார்திகேயா
கூர்வேலால் சூரனை கொடியாக்கிய
கந்தா
கார்கண்டு ஆடிடும் கானமயில்
வேலா
சீர்வளர் தேவசேனா சேர்ந்தினைந்த
சிவகுமரா
குறமகள் வள்ளியோடு கூடிமகிழும்
குகனே
திருசெந்தூர் கடலாடும்
செந்தில் ஆண்டவனே
ஆனந்தக் கூத்தாடி அழகான
காவடியும்
தேனோடு தினைமாவு தித்திக்கும்
கனிவகையுடன்
மான்விழி மாதரோடு மயிலமரும்
ஷண்முகனே
உன்னையே நினைந்து உனைநாடும்
பக்தர்தமை
கண்ணாலே கனிவாக காத்திடும் முருகா
எண்ணத்தில் என்றும் எழுதிய
காவியமே
வண்ணத்தில் என்னுள்ளே வாழ்கின்ற
ஒவியமே
பண்ணுடன் பாடினேன் கந்தசஷ்டி
நாளினிலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக