முத்தாக வந்த முதல்மூவர்
சித்தார்த்தி ஆண்டு சிறப்பான ஐப்பசிதிங்கள்
சீர்மிகு காஞ்சியில் சிங்கார திருவெஃகா
புத்தம்புதிய பொற்றாமரை பொய்கையில் அம்சமாகி
புத்தோணமதில் பிறந்து அவதரித்த பொய்கையே
நித்தம் அலை புரளும் நீள்மல்லை திருக்கடலில்
நீலோற்பவ மலரினில் நீள்கதாயுத அம்சமாகி
முத்தான அவிட்டமதில் மகிழ்ந்தெழுந்த பூதமே
மறுநாள் சதயமதில் மயிலைநகர் கேணியில்
சித்தம் குளிர்விக்கும் செவ்வல்லி மலர்தனில்
சீர்வாள் நந்தகத்தின் சீரான அம்சமாகி
குத்துவிளக்கென மலர்ந்த குளிர்வான பேயே
கருவரை புகுந்து ஜனிக்காத அயோநிஜர்களே
திருக்கோவலுர் தன்னில் திவ்யநாமம் பாடியே
திருவருளால் ஒருங்கினைந்த திவ்யபிரபந்த முதல்வர்களே
ஒருவர்பின் ஒருவரை ஓர் அறையில் கூட்டியே
ஒடிவந்து தன்னையிணைத்த ஒங்காரப் பெருமானை
கருவினில் அறிவுடையார் களிப்போடு பாடியே
ககனத்தை அன்பை கனிவோடு விளக்காக்கி
வார்கடலை ஆர்வமதை வார்த்திடும் நெய்யாக்கி
வருகின்ற கதிரவனை வளர்சிந்தையை திரியாக்கி
சீர்மிகு பரந்தாமனுக்கு சிந்தையுருக சுடரேற்றி
சீரான சுடரொளியில் சீராளனைக் கண்டுகொண்ட
பார்புகழ் முதலாழ்வார்கள் பிறந்திட்ட திங்களில்
பிரபந்தமதில் கலந்து பிறவிக்கடல் நீந்துவோமே
\

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக