சபரி
பயணம்
காலையில் கன்னிமூல கணபதியை
தொழுது
ஹரிஹர மைந்தனை ஐயப்பனைக் கண்டிட
மாலை அணிந்து மனதினில்
நினைந்து
மேனி துலக்கி மங்கல விரதமேற்று
காலையும் மாலையும் கருத்தொடு
அனுதினமும்
குளிர்நீரில் ஆடி குங்குமசந்தணம் திருநீறு
பூசி
சோலை மலர்தூவி சரணகோஷம்
எழுப்பி
சோதிச் சுடரை சிரம்தாழ்ந்து வணங்குவனே
வணங்கி எழுந்து நூறுஎட்டு சரணம்கூறி
வள்ளிமணாளன் சோதரனை வீழ்ந்து வணங்கினேன்
சுணங்காத விரதம் சூழ்கின்ற
தெய்வீகம்
சடுதியில் சென்றன சுகமான பத்துஐந்து நாட்கள்
கணங்கள் மாறியது காலமும்
கைகூடியது
கருத்துடன் வந்தகுரு கைகளால் இருமுடி
மணக்கும் மலருடன் மாலைசூட்டி
தலைஏற்றி
மகிழ்டுவோடு புறப்பாடு மறக்காத நிலைப்பாடு
நிலையாக வீற்றிருக்கும்
நிர்மல மூர்த்தியை
நியதியோடு கண்டிட நீள்தொலைப் பயணம்
சோலையான பாதைகளில் சுகமாகச் சென்றது
சிலிர்க்கும் பம்பையில் சிரத்தையுடன் நீராடி
சிலையாக வீற்றிருக்கும்
கன்னி முல கணபதிகண்டு
சிறுசிறு படியேற சிந்தையில் அவன் நினைவு
மலைமீது அமர்ந்திருக்கும்
மாயப்புலி வாகனனை
மனமெலாம் கரைந்திட மலைமுகட்டில் கண்டோமே
கண்டோம் கண்களால் காருண்ய சோதியை
கலமெலாம் வழிகாட்டும் கண்கண்ட தெய்வமதை
எண்ணமெலாம் சிலிர்க்க எழுந்திட்ட
உண்ர்வுகள்
எடுத்தியம்ப இயலாத எழிலான காட்சி
சின்னஞ்சிறு சிற்பமாய்
சிந்தையுள் புகுந்து
சிற்ப்பான பேரின்பம் சிறகடிக்க உள்நுழைந்தாய்
கணப்பொழிதில் தனைமறந்து
கரைந்திட செய்துவிட்டாய்
காலடியில் சரணடைந்தேன் காணிக்கை எற்றாயே
ஏற்றம் எம்வாழ்வில் என்றுமே உன்னாலே
என்றும் துணைவந்து எமைகாத்து அருள்வாயே
பெற்றவரும் உற்றவரும் புவியினில்
நீதானே
போற்றி வழிபட பொன்னம்பலனே வருவாயே
பற்றற்ற வாழ்வும் பக்தியில்
நாட்டமும்
பணிந்திடும் எனக்கருள பாலகனே வருவாயே
உற்றதோர் இறுதிமூச்சு உள்ளவரை
பிறருக்கு
உதவிடும் நிலையும் உள்ளமும் அருள்வாயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக