தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வருக
ஆயிரம் இதழ் செந்தாமரை மலர் ....அரியாசனமாய் திகழ்ந்திட பாயிரம் பாட தூண்டும் ...
.....பாவை புத்தாண்டு நாயகியே
துயரம் தீர்த்திட தூய அபய கரமும் ...
.....தாங்கிய செல்வக்குவியலும் தூய்மையான கமலமலர்
இரு கரங்களில் ..துலங்கிட அமர்ந்த திருமகளே
பொற்கிரிடமும் பொன் அணியும் பூட்டி
...பொலியும் கமல பத்மாசனமதில் நெற்குவியலும் நீரும் வளமும் நிறைந்து பெருக "விசுவாசமுடன்"
ஏற்றமுடன் வீற்றிருக்கும் தமிழே ....
....எல்லாம் நிறைந்த எழில் புத்தாண்டாக கற்பகமாய் வந்திடுக தாயே .......காலமெல்லாம் எம்மை காத்தருள்க
ராதா கவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக