சபரிகிரி வாசனே
நீல மேனியனும் நீலகண்டனும்
நளினமாய் கலந்தளித்தவனே
நீலமேகம் சூழ்நீள்மலைமுகட்டில்
நீல வண்ண ஆடையுடுத்தி
நிலம் காக்க நீள் தவமிருக்கும்
நலமிக்க தெய்வமே ஐயப்பா
கோலவிழி குமரனே உந்தனை
காணவும் வரமருள்வாயே
வாயால் சரண கோஷமிட்டேன்
வகையான துளசி மாலை அணிந்தேன்
காயாம்பூ வர்ண ஆடை உடுத்தேன்
காலை மாலை பூஜித்தேன்
ஓயாது உடலாலும் உள்ளத்தாலும் ஒருமனதோடு
விரதம் காத்தேன்
தாயாக உனைக்காண இருமுடி
தலையில் சுமந்து வந்தேன்
குருவும் நீயே குழந்தையும் நீயே
குலம் காக்கும் தெய்வமும்நீயே
நெறிப்படுத்தும் தலைவனும் நீயே
நீங்காததுணை தோழனும் நீயே
சிறியேன் பிழைபல செய்தாலும்
சினந்திடாதுஎன்னைகூட்டி
செல்வாயே
தறிகெடா மனதோடு நானும்
தவமிகு சபரிமலை காண
அருள்வாயே!
ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக