கடவுள் இருப்பார் இங்கே!
கலங்கிய கண்களில் இருப்பார்
காதில் புகும் ஓசையில்
இருப்பார்
புலம்பும் நாவில் இருப்பார்
புசிக்கும் வாயில் இருப்பார்
சிலிர்க்கும் உடலில். இருப்பார்
சிந்தையின் உள்ளும் இருப்பார்
பொலியும் மூளையில்இருப்பார்
பொங்கும் இதயத்தில்இருப்பார்
வீசும் கைகளில் இருப்பார்
வேகமாக ஓடும் கால்களில்
இருப்பார்
.
திசுக்கள்யாவிலும் இருப்பார்
திசையெங்கும் நிறைந்திருப்பார்
மாசு இல்லாமனதில் இருப்பார்
மனதின் இன்ப துன்பத்தில்
இருப்பார்
கூசாமல் கடவுளைத் தேடுவார்
கூடவே அவர் உள் இருப்பதை
அறியாமலே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக