ஞாயிறு, 11 ஜனவரி, 2026

புத்தாண்டு வருக

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

தமிழ் புத்தாண்டு வருக 
ஆயிரம் இதழ் செந்தாமரை மலர் ‌....அரியாசனமாய் திகழ்ந்திட பாயிரம் பாட தூண்டும் .‌..
‌‌.....பாவை புத்தாண்டு நாயகியே 
துயரம் தீர்த்திட தூய அபய கரமும் ...‌
‌.....தாங்கிய செல்வக்குவியலும் தூய்மையான கமலமலர் 
இரு கரங்களில் ‌..துலங்கிட அமர்ந்த திருமகளே 
பொற்கிரிடமும் பொன் அணியும் பூட்டி 
..‌.பொலியும் கமல பத்மாசனமதில் நெற்குவியலும் நீரும் வளமும் நிறைந்து பெருக "விசுவாசமுடன்"
 ஏற்றமுடன் வீற்றிருக்கும் தமிழே ....
‌....எல்லாம் நிறைந்த எழில் புத்தாண்டாக கற்பகமாய் வந்திடுக தாயே ‍‌‌.‌‌......காலமெல்லாம் எம்மை காத்தருள்க 
ராதா கவி

சனி, 10 ஜனவரி, 2026

அமைதி கூட்டம்

‌. ‌. அமைதி கூட்டம் 
அழகிய வெண்புறா கூட்டமே 
       அமைதியின் உருவமே நீர்தானோ !
சுழலும் உலகில் சூழ்ந்திருக்கும் பதட்டம்
      சுழல் பீரங்கி வெடி சத்தம் !
மழலையும் மயங்கி பயந்திட
       மானிடக் கூட்டம் அலைவது ஏன்?
 குழலான சிறந்த மூக்குகளில்
        கொஞ்சமும் சினம் வாரா தோ?
நிழலாக மரத்தடியில் கூடிக் கூடி 
      நீங்கள் மட்டும் மகிழ்வீரோ?
பழகும் இனிய தத்துவத்தை பாமரர்கள் யாம்
         பயன் பெற தர மாட்டீரோ?
   ‌‌. ‌‌ ‌ராதாகவி

முடியவில்லை

முடியவில்லை 

ஆசையை விட்டுவிடு முடியவில்லை
 அன்பை செலுத்து முடியவில்லை அமைதியாக இரு முடியவில்லை தியானம் செய் முடியவில்லை அஹிம்சையைப் பின்பற்று முடியவில்லை என்னதான் முடியும் உன்னால்
 என்னை உன் பாதத்தில் சேர்த்து விடு
 பிறகு எல்லாம் என்னால் முடியும் என்னால் அல்ல உன்னால் ஏனென்றால் நீயும் நானும் ஒன்றுதான்

சத்திய சாய் நூறாவது பிறந்தநாள்

சத்ய சாயி நூறாவது பிறந்தநாள் 

இதயத்தில் தெய்வீகம் மலரும் நாளே இனிய பிறந்தநாள் என்ற சத்திய சாயி
சத்ய சாயி என வந்து சங்கடம் தீர்ப்பவரே சக்தி எல்லாம் ஆழ்ந்த நம்பிக்கைதானே உத்தம விதை விதைத்தால் என்றும் உயர் நல்லொழுக்கம் விளைச்சல் தரும் சித்தமதில் கடவுளை நினைத்து பஜனை செய் 
சிறப்புகள் யாவும் உன் காலடியில் உணர்வாய்
 நித்தம் நீ தந்த நல் அறிவுரைகள் வாழ்வில் நிகழ்வதே எம்மை என்றும் காக்கும்

2 அனைவருக்கும் எல்லையிலா அன்பை கொடு அனைவருக்கும் எதிர்பார்ப்பிலா சேவை செய் இணையில்லா தெய்வத்தை தேடு இதயத்தில் எழும் நம்பிக்கையே இறைவன் அன்னத்தை பசித்தவர்க்கு அளித்திடு 
அவர் புசிப்பது கண்டு களித்திரு வீணடிக்காதே உணவை பணத்தை நேரத்தை ஆற்றலை விளையும் பண்பான கல்வியை விதைத்து விடு
 உன்னுள்ளே உறை கின்ற தெய்வீக மதை உணர்வதே உண்மையான ஆன்மீகம்  

ராதா கவி 

சத்ய சாயி சரணம் சரணம்

சருகு

‌...........சருகு 
காற்றில் சுழலும் சருகே
‌....காலத்தின்பசுமைஎங்கே ஏற்றமுடன்இருந்தாயே 
‌.‌‌...எங்கே விழ துடிக்கின்றாய் மாற்றமிலா மனித வாழ்வின் 
மகத்துவம்‌.இதுதானே
சற்றும் சளைக்காது சுழன்று கரை
 சேர்வேனோ?

சனி, 20 டிசம்பர், 2025

எங்கள் பாரதி

.    ‌‌.  எங்கள் பாரதி 

எட்டயபுரம் தந்த எழில் கவி பாரதி 
‌....எங்கள் பாரதம் தழைக்க எழுந்த பூபதி 
பாட்டினில் பரவசம் தந்தான் ‌.....பண்பினை இசையினில் கலந்தான் 
எட்டாத துறையில்லை பொருள் இல்லை 
.....ஏட்டினில் அனைத்தையும் பாடி வைத்தான் 
கொட்டும் அருவி என கவிதை மழை 
‌....குளிர்விக்க நாளும் பொழிந்தான் 

.‌.. 2 கலையை காட்சியை கண் முன் நிறுத்தினான் 
      காணாத லட்சிய பாதை வகுத்தான் 
மலையை அருவியை மாங்குயிலை பாடினான்      ‌...‌.‌‌மண்ணில் பெண்மையை போற்றினான்
 சிலையான மாந்தர் சிந்தனையை தூண்டினான்  .
‌....சுதந்திர கனலை மூட்டி வளர்த்தான் 
தலையான பாரதத்தை தரணியில் போற்றினான் ....
.....தலைவன் கனவு இன்று நினைவாக மாறியது!

இன்று பாரதி பிறந்த நாள் 
  பாரதியை போற்றுவோம்
               ராதா கவி

வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்

 

        திருமதி செளம்யா வரதராஜன்!

பரதமுனி கண்டெடுத்த பரதநாட்டியம்

        பாரதத்தின் பழம்பெரும் கலைக்களஞ்சியம்

கரங்களும் கண்ணும் கருத்தும் இனைந்து

        கவினுற கால்கள் சலங்கையுடன் சதிராடும்

குரல் எழுப்பும் கீதமதை கைவிரல்களில்

         முத்திரையும் பாவனையும் விளக்கிடும்

சிரசும் சிங்காரமும் சிலிர்க்கும் ஆடைகளும்

         சிந்தனையில் புகுந்து விளையாடும்

பரதமதை போற்றுவோம் பாரினில்

         பழங்கலைகள் வளர்த்திடுவோம்!

வாழ்க! வளர்க!  நின் கலைத்திறன்!

 

               21.12.25                             ராதாகவி