சனி, 20 டிசம்பர், 2025
எங்கள் பாரதி
வாழ்த்து மடல்
வாழ்த்து மடல்
திருமதி செளம்யா வரதராஜன்!
பரதமுனி கண்டெடுத்த பரதநாட்டியம்
பாரதத்தின் பழம்பெரும் கலைக்களஞ்சியம்
கரங்களும் கண்ணும் கருத்தும் இனைந்து
கவினுற கால்கள் சலங்கையுடன் சதிராடும்
குரல் எழுப்பும் கீதமதை கைவிரல்களில்
முத்திரையும் பாவனையும் விளக்கிடும்
சிரசும் சிங்காரமும் சிலிர்க்கும் ஆடைகளும்
சிந்தனையில் புகுந்து விளையாடும்
பரதமதை போற்றுவோம் பாரினில்
பழங்கலைகள் வளர்த்திடுவோம்!
வாழ்க! வளர்க! நின் கலைத்திறன்!
21.12.25 ராதாகவி
வியாழன், 17 டிசம்பர், 2020
நினைவுநாள்
நினைவுநாள்
வாமனன் என்னும் வாஞ்சைமிகு தெய்வம் வாழ்நாள் எல்லாம் வாழ்ந்தது எமக்காக !
வானளாவிய அன்பு வாரித்தரும் பரிவு
வந்தவர் சுற்றம் எனவேற்றுமையிலா உறவு!
கணமேனும்ஓய்விலா கடினமான உழைப்பு!
கல்வி தொழில் பயிற்சிகள் கற்றது சுயமாக!
என்ன வேலையென எண்ணிக்கையில்லாமல்
எதையும்செய்யும்கைகளும் அறிவும்!
2 தயக்கமின்றி தானாக வந்துதவும் தன்மை!
தாயும் தந்தையுமாகி அனைவரையும்வளர்த்த பாங்கு!
தனக்கென எதையும் தேடவில்லை!
தடையில்லா பாசமெலாம் மற்றவர்க்கு!
எழுபத்து எட்டு ஆண்டுகள் எம்மோடு வாழ்ந்து
எண்ணத்தில் நிறைந்திருந்தது எங்கோ சென்று விட்டாய்!
தொழும் உம்நினைவில்தொடர்கிறது எம் வாழ்வு
தெய்வமாக இருந்து என்றும் காப்பாயே!
வெள்ளி, 18 செப்டம்பர், 2020
வெள்ளி, 13 செப்டம்பர், 2019
ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
குடையோடு குறிலாக வந்து நெடிலாகவளர்ந்த வாமனன்
அடிதாங்க முடியளித்த மாவலி
அரசாண்ட இடம் காண வரும் நாள்!
கொடிமலர்கள்அத்தப்பூகோலமாகிட
கூடிக் களிக்கும்ஓணத்திருநாள்!
வடிவான நீள் வாழையிலையில்
வகையான ஓணசதாஉண்ணும் நாள்!
2
ஆடி வரும் நதியில் நீள் ஓடம்
ஆர்ப்பரித்து ஓடும் திருநாள்!
வடிவான வெண் ஆடை மகளிர்
வட்டமிட்டு வாழ்த்தி ஆடும் நாள்!
கூடிய பாரதம் குளிர்ந்து மகிழ
கூடிவரும் ஓணத்திருநாள்!
பாடிமகிழ்வோம்பல்வகைஉணவோடு
பாரெல்லாம் வாழ்க! வாழ்க!
ராதாகவி
அனைவருக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
வியாழன், 5 செப்டம்பர், 2019
உறுதுணையாக
உறுதுணையாக
அஆகற்பித்தவர்
ஆசிரியர்
அகபுற ஒழுக்கம்
புகட்டியவர்
ஆசிரியர்
அன்னை தந்தைக்கு
பின்னவர் ஆசிரியர்
அவரை வணங்க
அறிவுறுத்திய முன்னவர்
ஆசிரியர்
எண்ணும் எழுத்தும்
தந்தவர் ஆசிரியர்
ஏணிப்படியாகி ஏற்றியவர்
ஆசிரியர்
பண்பும் கலையும்
காட்டியவர் ஆசிரியர்
2
வேற்றுமைகளை
களைபவர் ஆசிரியர்
விளையாட்டை போற்றியவர்
ஆசிரியர்
கற்றவன் உயரக்கண்டு தினம்
கண்ணீர் மல்கி களிப்பவர்
ஆசிரியர்
பெற்ற நாட்டின் பாசம் மிகுந்திட
பாட்டில் தினம் வழி வகுத்தவர்
ஆசிரியர்
உற்ற உறவாக என்றும்
உறு துணையாக
உள்ளத்தில் இருப்பவர்
ஆசிரியர்
3
கண்ணெனும் கல்வியே
உயர் செல்வமென
காலத்தில் தந்தவர்
ஆசிரியர்
எண்ணங்கள் உயர்வையே
நோக்கிட
எத்தனையோ வழி காட்டியவர்
ஆசிரியர்
பண்ணில் இசைத்து பாடிட
பாரினில் கண்முன் தெய்வம்
ஆசிரியர்
விண்ணில் பறந்தாலும்
விந்தைகள் புரிந்தாலும்
வெற்றிக்கு அடியிட்ட
ஆசிரியரை பணிவோம் இன்று!
ராதாகவி
ஆசிரியர் தின வாழ்த்துகள்
ஞாயிறு, 1 செப்டம்பர், 2019
இதயத்தில் வருவாயே இளங்களிறே!
இதயத்தில் வருவாயே
இளங்களிறே!
ஆனை முகத்தோனே
அறிவே வடிவானவனே !
பானை வயிறோனே
பகலவன் ஒளியானவனே!
தேனின் சுவையோனே
தும்பிக்கை உடையோனே!
முனைந்து ஒடித்த தந்தமதில்
முதல் காவியம் எழுதியவனே!
2
கணையும் அங்குசமும்
கரங்களில் கொண்டவனே!
இணையும் விசிறியென ஆடும்
இருசெவி உடையோனே!
இனிய மோதகப்பிரியனே!
முன்னைக் கும் முன்னவனே!
மூல ஓம் வடிவானவனே!
கண்மூடி கரணம் போட
கனிந்து வந்து அருள் பவனே!
3.
திணைவள்ளிதேவாணைசூழ்
திருக் குமரனுக்கு மூத்தவனே!
அணைக்கும் அன்பு சபரி
அருள் ஐயப்பன் சகோதரனே!
மணையாளை இடம் கொண்ட
மலையவன் சிவன் மகனே!
இணையிலா இளங்களிறே எம்
இதயத்தில் வருவா யே!