வியாழன், 30 மே, 2019

அரியணை ஏறும் அஞ்சாத சிங்கம்


1. பிரதமராக அரியணை ஏறும்
      பார் புகழும் அஞ்சாத சிங்கம்
 பாரதம் புகழ் இனி ஒங்கும்
   பாரில் நாடுகள் வாழ்த்தும்
                           சீரான அரசு செழிக்கும்
   சீர்வளம் யாவும் பெருகும்
    கூரான அறிவும் பொறுமையும்
           கொண்ட மோடிஜியின் பதவிஏற்பு

2. உலகின் திருவிழா இன்று
          உன்னம் பொங்கும் மகிழ்வால்
   பல்வேறு திட்டங்கள் இனி
          பாய்ந்துவரும் காட்டாறுபோல்
         கலகலத்து ஒடிவரும் கங்கையும்
             காவிரியும் இணையும் விரைவில்
              சலசலக்கும் கிருஷ்ணா கோதவரி என
       சகல நதிகளும் இணையும்

3. தாய்மை சிறக்க தக்கபல
        திட்டங்கள் கேஸ் மானியம்
          சேய் தாய் பாதுகாப்பு மருத்துவம்
          சேர்த்து வரும் இன்ஷுரன்ஸ்
நோய்நொடி ஒடிவிடும்
             நாடிப்பெருகும் மருத்துவர்களால்
                             பாய்ந்து வரும் நீரால்
   பலப்படும் விவசாயம்

4. உழவருக்கு கைகொடுக்க வரும்
உண்மையான கடன்வசதி
     தழைக்கும் விதை உரம் மானியம்
தன்வீடு தேடிவரும் இனி
          பழங்குடியினருக்கு பல்வேலை வாய்ப்பு
       பள்ளிக்கள் பெருக்கம் கல்விதரம்
  செழிக்கும் கல்வித்துறை இனி
   செவ்விய திட்டங்களின் வழி

5. வீடு இல்லாதோர் இல்லை இனி
        விளங்கும் வீடுடல்லாம் ஒளிவீசும்
   நாடுஎல்லாம் பாதைகள் வளரும்
         நல்லொளி தரும் மின்விளக்குடன்
ஒடி ஒளியும் போராட்டங்கள்
ஒளிதரும் தொழில்வளம்
                          தேடித்தேடி தொழிற்சாலை
   தோன்றும் கிராமம் தோறும்


6. கலாச்சாரம் பண்பாடு பாதுகாப்பு
   கலைகள் எங்கும் பொலியும்
சிலை கொண்ட கோவில்கள்
சீரோடு பாதுகாக்கப்படும்
துவங்கும் இந்தியப் பண்பாடு
           துதித்து அனைவரும் ஒன்றாகிடுவர்
     கலவரம் என எதும் இல்லை இனி
                களங்கமிலா மதங்கள் இணைந்து வாழும்

7. இமயமுதல் குமரிவரையில்
         இந்தியன் என்ற ஒரே உணர்வு
  எமது நாடு எனும் பற்றுடன்
         எழுந்திடும் ஒற்றுமை உணர்வு
      தமது என எதையும் எண்ணாமல்
     நமது என பகிர்ந்து மகிழும்
   மதம் மொழி இனம் பிரிவுகள்
       விலகி ஒடும் வெற்றுமையில்
                                 ஒற்றுமை காணும்

8. மலர்ந்த தாமரை நாடெங்கும்
   மணம் வீசி மகிழ்விக்கும்
  எல்லா நேரமும் நாட்டையே
     எண்ணி நிற்கும் தலைவன்
        வல்லவன் மோடிஜி தலைமையில்
    வளர்க்கும் பாரத நாட்டை
              வல்லாசாக்கும் வான்தொடும் புகழ்பெரும்
                  வாழ்த்துவோம் வாழ்க மோடி அரசு என
                           வாழ்க வந்தேமாதரம்

திங்கள், 30 ஏப்ரல், 2018

மே தினம்

                                                           மே தினம்

1. கல்லிலும் முள்ளிலும் கதிர்புகா கானிலும்
          கடுகிஏறும் மலையிலும் கடினப் பாறையிலும்
      அல்லும் பகலும் அலை ஒயா கடலடியினிலும்
            அசையும் காற்றைக் கடந்து அண்ட வெளியிலும்
    வெல்லும் கைகள் வழிப்போடு பணிசெய்யும்
             வாட்டும் குளிரிலும் வரைமுகட்டில் காத்திருக்கும்
 வில்லாக வளைந்தும் வேர்வை சிந்தியும்
      விவாதம் பேதம் மதம் வேலிகள் கடந்தும்.

2. கைகளில் எடுத்து கனமிகு ஆயுதங்களில்
       கருவாகிப் பிறந்திடும் கனரக பொருட்கள்
கைகளில் அடங்கும் குண்டூசி முதல்
          கடல் கடந்து தாக்கும் கைவண்ண ஊர்திகள்
       கைகளில் மாலை கட்டி கடவுளை ஏற்றிடும்
             காலைமுதல் மாலைவரை கணநேர ஒய்வின்றி
       கைகளை உயர்த்திடும் கனவின் நாயகர்களே
               கைகூப்பும் வாழ்த்துக்கள் கவின்மிகு மேதினத்தில்

                                                                                                                               ராதாகவி
                                                                                                                                கோவை

திங்கள், 15 ஜனவரி, 2018

ஏற்றிட உன்னையன்றி!

21. முடிப்பு
ஏற்றிட உன்னையன்றி!

  ஏற்றிட உன்னையன்றி எனக்கோர் துணையில்லை
 எந்தன் கோரிக்கை எளிதாக முடித்திடுவாய்
                 பற்றுநீக்கி பூதநாதா பாசமுடன் ஏற்றிடுவாய்
         பவனியில் வாழ்வினை பழுதின்றி முடித்துவிட்டேன்
                 குற்ற உணர்வில்லை குறையேதும் இல்லை
    குறுகுறுக்கும் உள்மன உடல்வலி குறுகிட நீக்கி
சற்றும் தாமதமின்றி சன்னிதானம் அழைத்தேக
                    சடுதியில் வந்திடுக சபரிமலை ஐயப்பா!


பெங்களுர்                                                  "ராதாகவி"
30.11.17                                                      கோவை

அருளாகி...

20. அருளாகி...

அருளாகி ஹரிஹரன் அருமை மகனாகி
           அண்டங்கள் யாவையும் அன்பால் ஆள்பவனே
       உருவான சாஸ்தாவே உயர்சபரி அமர்ந்தவனே
        உயர்ந்து எழுந்த மகிஷியை அழித்தவனே
        மருவிலா மாளிகைபுர மஞ்சுமாதா ஆக்கியவனே
     மனதில் புகுந்து மயக்கம் தீர்த்தவனே
 கருவாகி எந்தன் கவிதையில் வந்தவனே
       கலக்கம் நீக்கி கருணையுடன் ஏற்பாயே!

ஆட்கொள்ள...

19. ஆட்கொள்ள...

ஆட்கொள்ள வருவாயே ஆனந்த சித்தனே
          ஆழ்மனதில் புகுந்தே அமைதியைத் தருவாயோ
             ஒட்டுவாயோ என்நோயை ஒப்பிலா வலிமை தருவாயோ
        ஒரத்தில் வந்துவிட்டேன் ஒளிதர வாராயோ
சிட்டுக் குருவியாய் சிறகடித்து பறந்துவிட
     சேர்ந்த என்முன் செல்வனே வருவாயே
   பட்டென ஆன்மாவை பாதத்தில் சேர்த்துவிடு
              பிறவியின் பயன்முடிய பற்றுநீக்கி அருள்வாயே!

தவிர்க்க முடியாத...

18. தவிர்க்க முடியாத...

தவிர்க்க முடியாத தினமும்வலி தொடரும்
     தாங்கும் சக்தியின்றி தானேவிழும் கண்ணீர்
                   தவிக்க வைத்து துயர்பட வைக்கின்றாய்
தங்கி உதவிட தளமில்லா கட்டிடமாய்
                   புவியில் எழுப்பி பரிதவிக்க விடுகின்றாய்
        பிறந்தபணி முடிந்திட பக்கம்வந்து காப்பாயோ?
   கவிதையில் புலம்பி கண்ணீர்விட வைப்பாயோ
      கலியுக வரதனே கணத்தில் ஆட்கொள்வாய்

வாராத மழையாக

17. வாராத மழையாக

வாராத மழையாக வந்துவந்து குளிர்வித்தாய்
      வாழ்வின் இறுதியில் நல்லமைதி தாராயோ?
                  காராம் பசுபோல் கருணை காட்டுவாயோ?
       கணமும் மனமதை கலங்காது வைப்பாயோ?
                  நீராகக் கண்ணீர் நீண்டுவழியே துடிப்புகள்
           நினைக்காத போதும் நிணைவில் வரும் தனிமை
                  வேராக நீயிருந்து வேதனை தனைநீக்கி
         வாழ்வின் இறுதியில் வெறுமை தவிர்ப்பாயோ!