செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

நாகலிங்கம்



நாகலிங்கம்
  

             கண்ணுதல் கடவுள் கங்கைதனை சூடியவன்
                கழுத்து சிரசு கைகளில் ஆபரணமாய்
            எண்ணற்ற நாகங்கள் எளிதாக அணிபவன்
                எடுத்தியம்ப இயலாத எதிர்வரும் துன்பங்கள்
            கண்காது மூக்குவாய் மெய்யெனும்  ஐம்புலங்கள்
               கணக்கிலா தீச்செயலில் கலக்கமின்றி   ஈடுபடின்
             மண்மேல் விஷத்தை கக்கிடும் நாகமாகும்
                 மனதால் ஐம்புலனை மகிமையுடன் அடக்க
             கண்கவரும் ஆபரணமாய் கருநாகம் மாறிடும்
                 காணும் நாகாபரணம் அணிந்திட்ட சிவதரிசனம்
             எண்ணிலா மனத்துயர் ஏற்றமிலா தீய ஆசை
                 எல்லாம் நீங்கியே இன்பவாழ்வு தந்திடுமே

ஆடிப் பூரத்து அழகிய பூவே



ஆடிப் பூரத்து அழகிய பூவே!

பூவனம் தன்னில் புனிததுளசி செடியருகில்
    பூவாகி நீவந்தாய் பெரியாழ்வார் மகளானாய்
பூமாலை சூட்டியே பூவையே நீமகிழ்ந்தாய்
     பாமாலை கேட்டே பரந்தாமன் கைபிடித்தான்
       பூவையரோடு நோன்பிருந்து பூரத்தில் பிறந்தவளே
    பூலோக நாயகனை புவியில் தானடைந்தாய்
    பூவிழிகள் கண்டநின் புதுக்கனவை வண்ணமாய்
            பூமகளே வாரணமாயிரமாய் பண்போடு அருளினாயே!

ஆன்மிக மலர்                அட்டை பட கவிதை
30.7.16                                              ராதாகவி

சக்குளத்துகாவு பகவதியே



சக்குளத்துகாவு பகவதியே!

எட்டுக் கைகளில் எடுத்திட்ட ஆயுதங்கள்
                    எழில் சக்கரம் எடுத்தூதும் சங்கம்
                  வெட்டும் அரிவாள் வீரியமுடன் சூலம்
வில்லும் அம்பும் வெலும் திரிசூலமும்
பட்டென விளங்கும் பளிங்கான அபயகரம்
      பழமான எலுமிச்சை பாவையின் திருமாலை
      பொட்டுடன் நெற்றிக்கண் பொலிகின்ற தோற்றம்
     பூமியில் பக்தர்கள் போற்றுகின்ற புதுவடிவம்
      கோட்டயம் சக்குளத்து காவுதனில் எழுந்தருளும்
       கோமகளே பகவதியே காலடியில் பணிவேனே!

ஸ்ரீ காசி விசாலாட்சி



ஸ்ரீ காசி விசாலாட்சி

அன்னமிடும் கைகொண்ட அன்னையான தேவியே
       அகன்றகண் விசாலாட்சி அகிலம்காக்க நின்றாயே
மின்னும் தாமரையில் முக்திதரும் சிவலிங்கமும்
     முழுமுதற் தெய்வமான மோதகப் பிரியனையும்
பின்னிறு கரம்தாங்க பிடித்தமாலை கமண்டலமும்
பொற்கரம் தாங்கிட புவனம் காத்திடவே
  பொன்னிற கங்கைகரையில் புனிதமாய் வீற்றிருப்பாய்
         பணிந்தேன் நின்பாதம்மனப் பக்குவம் தந்தருள்வாயே

உறையூர் வெக்காளி



உறையூர் வெக்காளி!

உறையூரில் குடியிருக்கும் உலகநாயகி வெக்காளி
உயர்வானம் கூரையாகி உயர்வளிக்கும் தாய்நீ
              கரைபுரளும் காவிரியின் கரையமர்ந்த சிவகாளி
கரங்களில் சூலமோடு குங்குமமும் தாங்கியே
              பறையென முழங்கும் பாம்புஉடுக்கை அங்குசம்
    பல்லாலும் பார்வையாலும் பயங்காட்டும் திரிசூலி
              தரைமீது அசுரனை தான்வீழ்த்திய ஒங்காரி
       தலைவணங்கும் மாந்தருக்கு தாயாகி அருள்புரிவாய்நீ