நாகலிங்கம்
கண்ணுதல் கடவுள் கங்கைதனை சூடியவன்
கழுத்து சிரசு கைகளில் ஆபரணமாய்
எண்ணற்ற நாகங்கள் எளிதாக அணிபவன்
எடுத்தியம்ப இயலாத எதிர்வரும் துன்பங்கள்
கண்காது மூக்குவாய் மெய்யெனும் ஐம்புலங்கள்
கணக்கிலா தீச்செயலில் கலக்கமின்றி ஈடுபடின்
மண்மேல் விஷத்தை கக்கிடும் நாகமாகும்
மனதால் ஐம்புலனை மகிமையுடன் அடக்க
கண்கவரும் ஆபரணமாய் கருநாகம் மாறிடும்
காணும் நாகாபரணம் அணிந்திட்ட சிவதரிசனம்
எண்ணிலா மனத்துயர் ஏற்றமிலா தீய ஆசை
எல்லாம் நீங்கியே இன்பவாழ்வு தந்திடுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக