உறையூர்
வெக்காளி!
உறையூரில்
குடியிருக்கும் உலகநாயகி வெக்காளி
உயர்வானம்
கூரையாகி உயர்வளிக்கும் தாய்நீ
கரைபுரளும் காவிரியின் கரையமர்ந்த சிவகாளி
கரங்களில்
சூலமோடு குங்குமமும் தாங்கியே
பறையென முழங்கும் பாம்புஉடுக்கை அங்குசம்
பல்லாலும் பார்வையாலும் பயங்காட்டும் திரிசூலி
தரைமீது அசுரனை தான்வீழ்த்திய ஒங்காரி
தலைவணங்கும் மாந்தருக்கு தாயாகி அருள்புரிவாய்நீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக