நால்வேதம் குதிரைகளாய் நல்மேரு வில்லாக
நாகசேஷன் நாணாக நற்பாற்கடல் அம்பாரியாக
மலர்மன்னன் மன்மதன் மாபெரும் பாணமாக
மலரனையான் பிரம்மா மாவீர சாரதியாக
உலாவரும் தேவர்கள் உடன்வரும் பரிவாரமாக
ஊர்த்தவ அசுரர்குலம் உறைந்து பதுங்கிட
நல்லிரவினில் வென்று நல்சம்ஹாரம் முடித்தாய்
நற்பெரும் மல்லிகார்ஜீனா நமச்சிவாயமே போற்றி
அன்மிக மலர் 15.5.2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக