அங்காளம்மன்
ஆர்பரிக்கும் நாக உடுக்கையும் அழகிய
பொற்தாமரையும்
அமிர்த
கலசமும் அச்சுறுத்தும் ஆயுதமாய்
கூர்வாளும் ஈரிறு கரங்களில் தாங்கி
காலொன்று
மடக்கி காற்சலங்கை பளீரிட
நேராக மறுகால நற்சிவன் தலைதாங்க
நேர்த்தியான ரத்தின நாககீரிடம் சிரமணிய
பொற்பாவை அங்காளம்மை புனிதமிகு ஆடியில்
பூவாக மலர்ந்து புவியினைக் காத்திடுவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக