காமாட்சி
கண்மலர்வாள்!
ஆடிவரும்
காவிரி ஆடிப்பெருக்காகி ஒடிவர
அடியெடுத்து அம்மையவள் அலங்கார பவனிவர
தேடிடும் தெய்வமெலாம் தேவியவள் வடிவாகி
தெவிட்டாத தேனாக திவ்யநாம பெயர்தாங்கி
நாடிவரும் நங்கையரின் நற்குங்குமம் திலகத்தில்
நளினமாய் வந்திடுவாள் நாயகியாய் அருள்தருவாள்
கூடிவரும் செல்வமெலாம் கூழ்ஊற்றி வழிபடவே
கொண்டாடும் ஆடியில் காமாட்சி கண்மலர்வாள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக