உலகை
உண்டவனே!
பத்து
அவதாரத்தில் பித்தாக செய்பவன்
பரமார்த்தனாய் வந்து பாலகனாய் வாழ்ந்தவன்
முத்தாக ஒளிவீசும் மோகனப் புன்னகையால்
மூலத்தின் அரும்பொருளை முன்னே காட்டுபவனே
வித்தாக ஒரிடத்தில் விழுந்தது சிறைச்சாலையில்
வளர்ந்தது ஒரிடத்தில் வளமான கோகுலத்தில்
கொத்தான மலர்களும் குழலும் கைகளில்
கீதை தானுரைக்க கோவிந்தனாய் வந்தவனே!
மத்தால்
அடிபடுவாய் மாதுக்கு அபயமாவாய்!
மண்மேல் தருமம் மங்காதுதங்கச் செய்வாய்!
சித்து விளையாடி சிந்தையை கவர்ந்தவனே
சிறுபிள்ளையே என்னைச் சற்றே கண்பாராய்!
சித்தம் தெளிவடைய சீக்கிரம் வந்தருள்க!
சித்திரமாய் என்னுள்ளே சீரோடு அமர்ந்திடுக!
உத்தமனே சரணம் உந்தனுக்கே என்உள்ளம்
உலகை உண்டவனே உன்பாதம் பணிவேனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக