வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்

குடையோடு குறிலாக வந்து                                 நெடிலாகவளர்ந்த வாமனன்
அடிதாங்க முடியளித்த மாவலி
அரசாண்ட இடம் காண வரும் நாள்!
கொடிமலர்கள்அத்தப்பூகோலமாகிட
கூடிக் களிக்கும்ஓணத்திருநாள்!
வடிவான நீள் வாழையிலையில்
வகையான ஓணசதாஉண்ணும் நாள்!

2
ஆடி வரும் நதியில் நீள் ஓடம்
ஆர்ப்பரித்து ஓடும் திருநாள்!
வடிவான வெண் ஆடை மகளிர்
வட்டமிட்டு வாழ்த்தி ஆடும் நாள்!
கூடிய பாரதம் குளிர்ந்து மகிழ
கூடிவரும் ஓணத்திருநாள்!
பாடிமகிழ்வோம்பல்வகைஉணவோடு
பாரெல்லாம் வாழ்க! வாழ்க!
                                  ராதாகவி
அனைவருக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

வியாழன், 5 செப்டம்பர், 2019

உறுதுணையாக

உறுதுணையாக

அஆகற்பித்தவர்
ஆசிரியர்
அகபுற ஒழுக்கம்
புகட்டியவர்
ஆசிரியர்
அன்னை தந்தைக்கு
பின்னவர் ஆசிரியர்
அவரை வணங்க
அறிவுறுத்திய முன்னவர்
ஆசிரியர்
எண்ணும் எழுத்தும்
தந்தவர் ஆசிரியர்
ஏணிப்படியாகி ஏற்றியவர்
ஆசிரியர்
பண்பும் கலையும்
காட்டியவர் ஆசிரியர்

2
வேற்றுமைகளை
களைபவர் ஆசிரியர்
விளையாட்டை போற்றியவர்
ஆசிரியர்
கற்றவன் உயரக்கண்டு தினம்
கண்ணீர் மல்கி களிப்பவர்
ஆசிரியர்
பெற்ற நாட்டின் பாசம் மிகுந்திட
பாட்டில் தினம் வழி வகுத்தவர்
ஆசிரியர்
உற்ற உறவாக என்றும்
உறு துணையாக
உள்ளத்தில் இருப்பவர்
ஆசிரியர்

3
கண்ணெனும் கல்வியே
உயர் செல்வமென
காலத்தில் தந்தவர்
ஆசிரியர்
எண்ணங்கள் உயர்வையே
நோக்கிட
எத்தனையோ வழி காட்டியவர்
ஆசிரியர்
பண்ணில் இசைத்து பாடிட
பாரினில் கண்முன் தெய்வம்
ஆசிரியர்
விண்ணில் பறந்தாலும்
விந்தைகள் புரிந்தாலும்
வெற்றிக்கு அடியிட்ட
ஆசிரியரை பணிவோம் இன்று!
                            ராதாகவி

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

இதயத்தில் வருவாயே இளங்களிறே!

இதயத்தில் வருவாயே
இளங்களிறே!

ஆனை முகத்தோனே
    அறிவே வடிவானவனே  !                                                               
பானை வயிறோனே
    பகலவன் ஒளியானவனே!
தேனின் சுவையோனே
  தும்பிக்கை உடையோனே!
முனைந்து ஒடித்த தந்தமதில்
முதல் காவியம் எழுதியவனே!

2
கணையும் அங்குசமும்
கரங்களில் கொண்டவனே!
இணையும் விசிறியென ஆடும்
  இருசெவி உடையோனே!
  இனிய மோதகப்பிரியனே!
முன்னைக் கும் முன்னவனே!
மூல ஓம் வடிவானவனே!
கண்மூடி கரணம் போட
கனிந்து வந்து அருள் பவனே!

3.
திணைவள்ளிதேவாணைசூழ் 
திருக் குமரனுக்கு மூத்தவனே!
அணைக்கும் அன்பு சபரி
    அருள் ஐயப்பன் சகோதரனே!
மணையாளை இடம் கொண்ட
மலையவன்  சிவன் மகனே!
இணையிலா இளங்களிறே எம்
இதயத்தில் வருவா யே!

ஞாயிறு, 21 ஜூலை, 2019

கலாம் நினைவுகள்

                    கலாம் நினைவுகள்

கனவு காணுங்கள்

கற்றலின் எல்லையை தொடுவேன் என
ககனத்தில்  வெற்றியை பெறுவேன் என

பெரியதையே சிந்திப்பேன் என
பெரும் ஆற்றலைப் பெறுவேன் என

அண்ட சராசரங்களை வெல்வேன் என
அனைத்திலும் என் முத்திரையை பதிப்பேன் என

உயர்ந்த இலக்கினுக்கு போராடுவேன் என
உயிரினத்தின் பெருமையை உணர்வேன் என

உலகத்தோர் அனைவரும் என் உடன் பிறப்பு என
உண்மையை என்றும் என் உணர்வு என

பெற்ற தாயை, மொழியை போற்றுவேன் என
பிறந்த பொன்னாட்டின் பெருமை காப்பேன் என

      கனவு காணுங்கள்
                                            ராதாகவி

வெள்ளி, 12 ஜூலை, 2019

அந்த நாள்

அந்த நாள்

1. மண்பானையென உடல் உள்ளே
மனமென்னும் ஆன்மா
திண்ணமான ஆயுள் என்னும் நீர்
திட்டமிட்டு உள்நிரப்பி
கண்ணுக்குத் தெரியாத சிறு துளை
கடவுளே போட்டும் வைத்தான்
எண்ணம் எதும் அறியாமலே
என்றும் வெளியேறும் நீர்

2. நிலையாக காலமெல்லாம்
நிரம்பியிருக்கும் என நம்பிக்கை
மலை மலையாய் திட்டங்கள்
மானிட வாழ்வு தீட்டும்
வலை விரித்த மாயையில்
வலு.வில் விழுந்து மகிழும்
கலையென்றும் சிலையென்றும்
காலமெல்லாம் களிப்புறும்

3. வளிவந்திட வேப்பம் பூ
வீதியெல்லாம் விழுவது போல்
துளி துயர் வந்தாலும்
துள்ளி துடித்து கதறும்
துளித்துளியாய் நீர் அடியில்
தெளித்தால் போல் நீங்குவதை
களிப்பின் மிகுதியில்
காணாது மகிழ்ந்திருக்கும்

4. பானையில் நீர் குறைய
பந்தபாசம் விலகிவிடும்
துணையாக வந்ததெல்லாம்
தூர நின்று பார்த்திடும்
அணையாக இருந்த உறுப்புகள்
ஆங்காங்கே தளர்ந்துவிடும்
கணையாக துயர் அம்புகள்
கண்முன்னே துளைத்திடும்

5. துளையிட்ட பானை நீர் தீரும் அந்த
தினமும் வந்ததென அறியும்
மணை வீடு வாசல் உறவு
மனதை விட்டு அகலும்
அணைத்துக் காத்திட ஒருவனே என
அறியும் அன்று ஆன்மாவே
இணைத்து கைகூப்பி இறைவா
இறுதி நாளில் உடன் இரு என அழும்

6. தினம் அதை மனம் அறியும்
தீவிர சிந்தனை ஏதுமின்றி
மனம் ஒன்றி விடும் பரமனிடம்
மயக்கம் ஏதும் இனி இல்லை
சினம் என்பது அவனிடமில்லை
சிக்கெனப் பிடித்திடுவான்
இனம் காணா இன்பமதில்
இறுதி நாளில் நிலைத்திருப்பாய்!

                            ராதாகவி

கடவுள் இருப்பார் இங்கே!

கடவுள் இருப்பார் இங்கே!

கலங்கிய கண்களில் இருப்பார்
காதில்  புகும்  ஓசையில்
இருப்பார்
புலம்பும் நாவில்  இருப்பார்
புசிக்கும் வாயில்  இருப்பார்

சிலிர்க்கும் உடலில். இருப்பார்
சிந்தையின் உள்ளும்  இருப்பார்
பொலியும் மூளையில்இருப்பார்
பொங்கும் இதயத்தில்இருப்பார்
‍‍‍‌
வீசும் கைகளில் இருப்பார்
வேகமாக ஓடும் கால்களில்
இருப்பார்
‌‌.
தி‌‍சுக்கள்யாவிலும் இருப்பார்
திசையெங்கும் நிறைந்திருப்பார்
மாசு இல்லாமனதில் இருப்பார்
மனதின் இன்ப துன்பத்தில்
இருப்பார்
கூசாமல் கடவுளைத் தேடுவார்
கூடவே அவர் உள் இருப்பதை
அறியாமலே!

புதன், 10 ஜூலை, 2019

அத்திவரதரே! ஆனந்தரூபனே!

அத்திவரதரே! ஆனந்தரூபனே!

ஈர்இருபது ஆண்டுகள் ஆன்மீக
‌ஒளிவீசும் உருவம் உள்மறைய நீரினில் ‌ அனந்தசரசில் சயன
நித்திரை செய்த நீலமேகப் ‌பெருமானே!
வீரியமுடன்எழுந்துவெளிவந்து .‌‌‌எமக்கு
வரம்அருள வந்தாயோ? வடிவுடைய அத்தி வரதா
பிரம்மன் பூஜித்தபிரம்மாண்ட பரம்பொருளே!
பாமரன் எனக்காகவும் பாரினில் எழுந்தாயோ?
2.
பச்சையம் மணக்கும் மரகத மேனியனே!
பல்லாண்டு கிடந்தும் பரிமளிக்கும் சந்தணமே!
இச்சைகளை நீக்கிஇனிய தரிசனம் தர
இம்மை மறுமை பிணிதனை நீக்கிட
கச்சியில் கிடந்தும் நின்றும்
காட்சிதரும் காலத்தின் தலைவனே அத்திவரதரே!
மெச்சும் பணி ஏதும் மாநலத்தில் செய்தேனில்லை
மேகவர்ணனே நின் பாதமதில்
மனநிறைவோடு சரணடைந்தேன்!

சபரிகிரி வாசனே

சபரிகிரி வாசனே

‌‍நீல மேனியனும் நீலகண்டனும்
நளினமாய்  கலந்தளித்தவனே
நீலமேகம் சூழ்நீள்மலைமுகட்டில்
நீல வண்ண ஆடையுடுத்தி
‌‍‌‌‍நிலம் காக்க நீள் தவமிருக்கும்
நலமிக்க தெய்வமே ஐயப்பா
கோலவிழி குமரனே உந்தனை
காணவும் வரமருள்வாயே

வாயால் சரண கோஷமிட்டேன்
வகையான துளசி மாலை அணிந்தேன்
காயாம்பூ வர்ண ஆடை உடுத்தேன்
காலை மாலை பூஜித்தேன்
ஓயாது உடலாலும் உள்ளத்தாலும் ஒருமனதோடு
விரதம் காத்தேன்
தாயாக உனைக்காண இருமுடி
தலையில் சுமந்து வந்தேன்

குருவும் நீயே குழந்தையும் நீயே
குலம் காக்கும் தெய்வமும்நீயே
நெறிப்படுத்தும் தலைவனும் நீயே
நீங்காததுணை தோழனும் நீயே
சிறியேன் பிழைபல செய்தாலும்
சினந்திடாதுஎன்னைகூட்டி
செல்வாயே
தறிகெடா மனதோடு நானும்
தவமிகு சபரிமலை காண
அருள்வாயே!

                                   ராதாகவி

இறுதி கட்டம்

இறுதி கட்டம்

குறை ஒன்றும் இல்லை என கூறமறுக்கும் மனம் நிறைவானவாழ்வு என நினை க்க மறுக்கும் நினைவு
மறைக்க இயலா நிகழ்வுகள்
மனதில் குவிந்த நிலை
சிறையாகிப்போன என்
சிந்தையின் சுழற்சி
2
சுழற்சி யின் காலச்
சக்கரம் நிற்கும் வேளை
சுழலும் உலகில் என் சாதனை என சொல்ல இயலாஅச்சம்
கழன்று விழும் மறை ஆணிகள்
காலத்தின் வண்டி நிற்கும்
பழங்கதையாகி விடும்
பாரில் என் நினைவு யாவுமே
3
பழகிய பெயர் போய்விடும்
பாசமிகு உறவுகள்விலகிவிடும்
உழைத்தபொருள் உரு மாறும்
உலகில் என் சுவடுகள் நீங்கும்
மழை வெள்ளமென பெருகிய
செயல்மளமளவென ஓடி மறையும்
அழைத்திட நின் நாமம் தேடும்
அசைவுகள் யாவும்நின்றுவிடும்
4
விட்டுவிடு வேண்டுவன வேண்டாதன
தொட்டுவிடு தூயவன்பாதங்கள்
வாட்டிய துன்பங்கள் வானில்
பறந்துவிடும்
காட்டும் கண்முன் கனிவான உலகினையே
கெட்டு அலைந்தவாழ்வாயினும்
சிட்டாக  உன் ஆன்மா சேரந்துவிடும் பரமனடி
எட்டாத இடத்தை எட்டிவிடும்
நொடியில்
கிட்டாது இனிபிறவி கிடைத்தடும் வீடு பேறு

                   ‌.             ராதாகவி

வியாழன், 4 ஜூலை, 2019

சரணடைந்தேன்

                         
1. நெருப்பானாய் நீரானாய்
உருவிலா வளியானாய்
பரந்த வெளியானாய்
பாம்பணையில் படுத்திருப்பாய்

2. படுத்தும் நின்றும் அமர்ந்தாய்
மடுவில் ஆடினாய் மத்தடி பட்டாய்
அடுத்தவரை ஆதரித்தாய்
கெடுத்தவரை அழித்தாய்

3. அழியாது உலகு காத்தாய்
அழகிய பத்து அவதாரமானாய்
அழியாத மூர்த்தங்கள் ஆனாய்
மொழிந்தாய் கீதையை முக்தியளித்தாய்

4. முக்தி தரும் பெருமானாய் மூழ்கி இருந்து
அத்தி வரதராய் அருளிட வெளிவந்தாய்
பக்தியா பரவசமா பாமரன் நான் அறியேன்
சித்தத்தில் ஏற்பாயா சிலையானவனே சிறியேனையே

5. சிறு மீனாய் சிற்றசைவு ஆமையாய்
சிறு கொம்பு வராகமாய் சீறிடும் சிங்கமாய்
சிற்றடி வாமனனாய் சீனமிகு பரசு வாய்
போற்றும் பல ராமனாய் பூண்டவில் ராமனாய்

6. வித்தகன் கண்ணனாய் வெற்றிமிகு கல்கியாய்
பத்தவதாரமாய் பாரில் எழுந்தவனாய்
எத்திசையும் புகழ் மிகு காஞ்சியில்
நித்தம் அருளிட நீ எழுந்து வந்தாயோ

7. வந்தாய் என் சிந்தையுள் புகுந்தாய்
தந்தேன் எனதெல்லாம் தாயாகி ஏற்பாயே
சிந்தையில் உன் நாமம் சங்கீதமாய்
எந்தநேரமும் என் உள்ளே எதிரொலிப்பாய்

8. எதிர்பார்க்கும் அந்நாளில்
எதிர் வந்து என் கண்ணில் நிற்பாயோ
ஏதும் நான் வேண்டேன் அத்திவரதா
எதிர்கொண்டு ஆட்கொள் பெருமாளே!

                                                  ராதாகவி

ஞாயிறு, 23 ஜூன், 2019

ஆழ்வார் அமுதம்

ஆழ்வார் அமுதம்
பத்தவதாரம் எடுத்தாய்
பித்தனையும் கவர்ந்தாய்
முத்தமிழால் மலர்ந்தாய்
முத்துக்களான பாசுரமானாய்
சித்தம் தெளிய கீதையானாய்
பத்து தலையான் மேல் படுத்தாய்
எத்தனை நாள் நீ காத்திருப்பாய்
உத்தமனாய் நான் உன்னை சரணடைய!

அவரே

ஒளியும் அவரே
இருளும் அவரே
ஜடத்திற்கும்
‌...இருட்டுக்கும்..‍‌‌
அப்பாற்பட்டவரும். அவரே .தோன்றாதவர் அவரே .தோற்றமும் முடிவும்அற்றவர் அவரே
அறியப்படும் பொருளும் அவரே அறிவின் இலக்கும் அவரே .அனைத்து
இதயத்திலும் இருப்பவரும் அவரே!   
       கீதாசாரம்

யோகா தினம்

அமைதியான மனமே
மகிழ்ச்சி தரும்
அந்த மகிழ்ச்சி யின் வடிவம்யோகா
யோகா மதம் சார்ந்தது அல்ல
விஞ்ஞான அறிவு வழியே வருவது
வலிமையான உடலில் தான்
கட்டுப்பாடான மனம் இயங்கும்
உடல்.மனம்.சமூகம்.ஆன்மீகம்
எல்லாவற்றையும் மகிழச்செய்வது யோகா.
வாழ்க உலக யோகா தினம்

நானே

வெற்றி விரும்புவோரின்
உள் ஆக்க சக்தி நானே
அடக்குபவரின் உள் அடக்க சக்தியும் நானே
மறைக்கவேண்டியதை காக்க
மவுனமாக இருப்பவன் நானே
ஞானிகளின் உள் த த்துவ
ஞானமும் நானே
உயிர்கள் தோன்ற மூலமான
உயர் வித்தும் நானே
நானின்றி உலகில் ஏதுமில்லை
நன்கறிவாய் ஆன்மாவே!

கீதாசாரம்

குருநானக்

குருநானக்
என் உள்ளமே பண்பட்ட
நிலம் அதில்
நல் தியானம் எனும் விதை விதைப்பேன்
நற் செயலால் அதை காப்பேன்
நற் பயிராய் தெய்வீகம் விளையும் அதை
என் உடல் எனும் கடைமூலம்
விற்பேன்.என்மக்களுக்கு
அருளை வழங்குவேன்
எனக்கு பேரானந்தம் எனும்
லாபம் கிடைக்கும்
எனவே நான் ஒரு விவசாயி
ஒரு வியாபாரி........

புகழ் பழியை சமமாய் கருது

புகழ் பழியை சமமாய் கருது
பகைவனை நண்பனை சமமாக நடத்து.  " நான் செய்கிறேன் " என எண்ணாதே  நீயே
குணங்களை கடந்தவன்ஆவாய்
உலக வாழ்வில் ஈடுபாடு தவிர்
உயர் பக்தியிலே நிலை பெறு நீயே "சத்சித் ஆனந்தம் " எனும்
பரம்பொருளை அடையும்
பேறு பெறுவாய்!
கீதாசாரம்

இறைவன் வருவான்

                  இறைவன் வருவான்
மண்ணை விடு பெண்ணை விடு!
பொன் எனும் பொருளை விடு!
உன்னை நாடும் உறவை விடு!
உற்ற பந்த பாசத்தை விடு!
மண்ணில் பிறரை ஆளும்
உன் ஆளுமையை விடு!
பக்தியுடன் என் பாதங்களைப் பிடி
பக்கத்தில் வந்து என் கரம் நீட்டி
உன் விரல் பிடிப்பேன்!
உன்னத பேரின்பத்திற்கு உன்னை
என்னோடு அழைத்துச் செல்வேன்!

வியாழன், 30 மே, 2019

அரியணை ஏறும் அஞ்சாத சிங்கம்


1. பிரதமராக அரியணை ஏறும்
      பார் புகழும் அஞ்சாத சிங்கம்
 பாரதம் புகழ் இனி ஒங்கும்
   பாரில் நாடுகள் வாழ்த்தும்
                           சீரான அரசு செழிக்கும்
   சீர்வளம் யாவும் பெருகும்
    கூரான அறிவும் பொறுமையும்
           கொண்ட மோடிஜியின் பதவிஏற்பு

2. உலகின் திருவிழா இன்று
          உன்னம் பொங்கும் மகிழ்வால்
   பல்வேறு திட்டங்கள் இனி
          பாய்ந்துவரும் காட்டாறுபோல்
         கலகலத்து ஒடிவரும் கங்கையும்
             காவிரியும் இணையும் விரைவில்
              சலசலக்கும் கிருஷ்ணா கோதவரி என
       சகல நதிகளும் இணையும்

3. தாய்மை சிறக்க தக்கபல
        திட்டங்கள் கேஸ் மானியம்
          சேய் தாய் பாதுகாப்பு மருத்துவம்
          சேர்த்து வரும் இன்ஷுரன்ஸ்
நோய்நொடி ஒடிவிடும்
             நாடிப்பெருகும் மருத்துவர்களால்
                             பாய்ந்து வரும் நீரால்
   பலப்படும் விவசாயம்

4. உழவருக்கு கைகொடுக்க வரும்
உண்மையான கடன்வசதி
     தழைக்கும் விதை உரம் மானியம்
தன்வீடு தேடிவரும் இனி
          பழங்குடியினருக்கு பல்வேலை வாய்ப்பு
       பள்ளிக்கள் பெருக்கம் கல்விதரம்
  செழிக்கும் கல்வித்துறை இனி
   செவ்விய திட்டங்களின் வழி

5. வீடு இல்லாதோர் இல்லை இனி
        விளங்கும் வீடுடல்லாம் ஒளிவீசும்
   நாடுஎல்லாம் பாதைகள் வளரும்
         நல்லொளி தரும் மின்விளக்குடன்
ஒடி ஒளியும் போராட்டங்கள்
ஒளிதரும் தொழில்வளம்
                          தேடித்தேடி தொழிற்சாலை
   தோன்றும் கிராமம் தோறும்


6. கலாச்சாரம் பண்பாடு பாதுகாப்பு
   கலைகள் எங்கும் பொலியும்
சிலை கொண்ட கோவில்கள்
சீரோடு பாதுகாக்கப்படும்
துவங்கும் இந்தியப் பண்பாடு
           துதித்து அனைவரும் ஒன்றாகிடுவர்
     கலவரம் என எதும் இல்லை இனி
                களங்கமிலா மதங்கள் இணைந்து வாழும்

7. இமயமுதல் குமரிவரையில்
         இந்தியன் என்ற ஒரே உணர்வு
  எமது நாடு எனும் பற்றுடன்
         எழுந்திடும் ஒற்றுமை உணர்வு
      தமது என எதையும் எண்ணாமல்
     நமது என பகிர்ந்து மகிழும்
   மதம் மொழி இனம் பிரிவுகள்
       விலகி ஒடும் வெற்றுமையில்
                                 ஒற்றுமை காணும்

8. மலர்ந்த தாமரை நாடெங்கும்
   மணம் வீசி மகிழ்விக்கும்
  எல்லா நேரமும் நாட்டையே
     எண்ணி நிற்கும் தலைவன்
        வல்லவன் மோடிஜி தலைமையில்
    வளர்க்கும் பாரத நாட்டை
              வல்லாசாக்கும் வான்தொடும் புகழ்பெரும்
                  வாழ்த்துவோம் வாழ்க மோடி அரசு என
                           வாழ்க வந்தேமாதரம்