கொண்டையின் மயிலிறகோ குழல்
அழகோ
குமிழ் சிரிப்போ குவிந்திடும் செம்பவளவாயோ
குண்டலம் குதித்தாடும்
இருசெவியோ
குறும்போடு பளபளக்கும் வண்டுவிழியோ
கொண்டல் வண்ணமோ குவளை மூக்கோ
கைகளில் தவழ்கின்ற புல்லாங் குழலோ
அண்டமெலாம் மயங்க வைக்கும்
மாயம்
அழகா உன்னிடம் எதிலோ நானறியேனே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக