ஒயாது அழித்தலை ஒய்விலாது
செய்தனையோ
ஒய்வெடுக்க தோல்மீது ஒம்காரத்தில் அமர்ந்தனையோ
மாயாத துயரங்கள் மாந்தருக்கு
மாய்ந்திட
மலராசனமிட்டு மாதவம் செய்தனையோ
காயாத எனக்கருள கல்லுக்குள்
ஈரமாகி
கால்தூக்கி நடனமாடிய கனகசபை நீத்தனையோ
சாயாத என் உடலினை சகத்தின்
மண்ணுக்கும்
சாகாத என் ஆன்மாவைநின் செவ்வடியிலும் சேர்ப்பாயோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக