நமச் சிவாயமென நாவினில்
இனிக்கும்
நந்திமீது நாயகன் நற்குடும்பம் தோன்றும்
உமா சிவசிங்கரி உடனுறை
தாயாவாள்
உலகமகா மூலவன் உள்ளமர்ந்த கணபதி
சமர் புரியும் சண்முகன்
சோதர்கள்
சந்தியிலும் குன்றிலும் சன்னதி காண்பவர்
அமரத்துவம் அடையவே ஆதிசிவ
குடும்பமதை
அழகிய சிவரத்திரியில் அகமகிழ்ந்து பணிவோமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக