தஞ்சமென வந்தவனை தம்பியெனத்
தழுவி
தன்னெஞ்சில் வைத்து அருளிய காகுத்தனை
நெஞ்சில் நிறுத்தி நானிலத்தில்
என்றும்
நிலைபெற்று சிரஞ்சீவியாய் நிறைந்திருக்கும் அனுமனே
சஞ்சீவி பருவதத்தை சட்டெனத்
தூக்கிவந்து
சகோதரன் உயிர்மீட்ட சொல்லின் செல்வனே
அஞ்சா நெஞ்சமும் அறிவோடு
ஆற்றலும்
அன்போடு தூய்மையும் அருவியென நாவண்மையும்
எஞ்ஞான்றும் எமக்களிப்பாய்
ஈடில்லா ஆஞ்சநேயா
என்றென்றும் உனதடியே போற்றிப் பணிவேனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக