காவிரியும்
கொள்ளிடமும் கைகோர்த்து மாலையாகி
கருமுகில் வண்ணன் கழுத்தினில் ஆடிவர
பூவிரியும் பொன்னியும் புனலாகி பெருகிவர
பாம்பணையில் கைவைத்து பாதம்நீட்டி பள்ளிகொண்டு
தேவிரியும்
இருதேவியர் தொழுது அருகிருக்க
தேனரங்கம் பாவரங்கம் தெவிட்டாத கவியரங்கம்
பாவிரியும்
ஆழ்வார்கள் பன்னிருவர் பிரபந்தமோடு
புரிதுயில் பயிலுகின்ற பெருமானே அருள்வாயே!
ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக