அணைந்த வீணையை அழகிய விரல்
மீட்ட
அறிவின் ஏடும் ஜபமாலையும் மறுகைஏந்த
துணையாக அன்னம் துள்ளி
விளையாட
துலங்கும் வெண்தாமரையில் வீற்றிருக்கும் சுடரே
இனையிலா கலைகளில் இயங்கிடும்
தேவி
இன்முகம் கனிந்து நல்லறிவு அருள்வாயே
முணைந்து வெற்றிகளை முன்வந்து
பெற்றிட
முத்தான நாவுக்கரசி கலைவாணி போற்றியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக