மேலெழுந்த
இடப்பாதம் விண்ணளக்க
மிதித்த நின்ற வலப்பாதம் மண்ணளக்க
மாலவன் கைவிரல் மூன்றாம் அடிகேட்க
முடிகாட்டி மாபலியும் சரணடைய
நீலக்கடல்
மேலணையும் திருமாலே
நீள உயர்ந்து நின்ற குறளாகிய வாமனா
உலகளக்க வந்தனையோ உளங்கான வந்தனையோ
ஊழ்வினை நீக்கியெனை உன்னோடு சேர்ப்பாயே!
ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக