வெள்ளிப் பனிமலையே விளங்கும் நின்திருமுகம்
விளையாடும் மலையடுக்கு விரிந்திடும் நின்குழல்
வெள்ளிநிலவு மூன்றாம்பிறையாகி வீற்றிருக்கும்
திருச்சடை
வெண்ணீறு ஒளிவிட விழிக்கின்ற நெற்றிக்கண்
துள்ளிடும்
திரிசூலம் துவண்டுநெளியும் நாகம்
தூயகங்கையை தாங்கிடும் திருமுடி
அள்ளித்தரும்
பிரதோஷ ஆனந்த நாயகன்
அவனியை காத்திட ஆதிசிவமே வந்தருள்க!
ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக