வளரும் தேயும் வானில்வரும்
நிலவாக
வளரும் ஆசைகள் வகைபல என்னுள்ளே
தளரும் ஒருநாள் தவிர்த்துஎழும்
மறுநாள்
தள்ளாடும் ஆசைகளில் தவிக்கும் மனம்தினம்
குளமாகி குழம்பும் குறுகிய
மனதை
கூறுபோட்டு பார்க்கவே கூடிவரும் தியானம்
அளவிலா லிங்கமாகி அடியும்
முடியுமிலான்
அன்பே சிவமெனில் ஆட்கொள்ள வருவானே!
பிறப்பே முதலாக பின்மரனம்
முடிவாக
பாவ புண்ணியத்தின் பலனாக புவியினில்
பிறவியென எழும் பின்மீண்டும்
எழும்
பிறவியினின்று விடுபட பற்றும் ஒரேவழி
பிறஉயிரினை தனதாகப் பேணும்
அன்புவழி
பரமன் காட்டுகின்ற அன்பே சிவமென்றால்
பிறவி சுழறச்சி பறந்திடும்
தூசாக
பொருளுணர்ந்து விரதம் பேணும் சிவராத்திரி
பிறவி பெற்ற பயனை இம்மையிலும்
பின்மறுமையிலும் தருகின்ற பரமசிவன் திருநாளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக