அபயம் தரும் பொற்கரத்தில்
ஆற்றல்மிகு அருள்வேல்
ஆறுமுகம் பெயர்கொண்டு அரவணைக்கும் அழகுவேல்
தபம் ஏதும் செய்தறியா தடுமாற்றம்
நீக்கும்வேல்
தரணியிலே தவக்கோலம் தாங்கிநிற்கும் பழனிவேல்
கோபம்கொண்டு சூரனை கொன்றுவென்ற
வீரவேல்
கோலமிகு மயிலாக்கி சேவற் கொடியாக்கிய கருணைவேல்
பாபம்நீக்கி அறுபடை வீட்டில்
பாசம்தரும் பக்திவேல்
பாலனாய் குமரனாய் பரமயோகியாய் காக்கும் ஞானவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக