சீதாராமா எனில் சினமெலாம்
ஒடிவிடும்
சிந்தையில் பொறுமையே சீராக குடியேறும்
மாதாபிதா வாக்கினை மனதால்
ஏற்றிடும்
மாளாத துயரிலும் மனம்தளராது காத்திடும்
ஆதரவாய் அனைவரிடம் அன்பூற்று
பெருகிடும்
அரசனோ ஆண்டியோ அகிலமோ ஆரண்யமோ
பேதமின்றி எண்ணிடும் பாசமழை
பொழிந்திடும்
பவித்திர தம்பதிதிருநாமம் பாவமெலாம் நீக்கிடுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக