ஒருசொல் ஒருவில் ஒருதாரமென
உயர்ந்தவனே
ஒளிரும் முகந்தனில் ஒங்கிநிற்கும் சாந்தரூபனே
திருமகளாம் சீதையோடு தீர்க்க
தரிசனம் தருபவனே
தயங்காது யாவரையும் தன் சோதரராய் ஏற்றவனே
மருவிலா மன்னராட்சி முன்
ராமராஜ்யம் தந்தவனே
மக்களைத் தன்கண்ணாக மனதில் கொண்டவனே
பொறுமையின் திலகமாய் புவியினில்
வாழ்ந்தவனே
புனிதனே எமைகாக்கும் ராமனே அருள்தருக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக