மலையில் பிறந்து வெளியில் தவழ்ந்து
மாகடலில் கலக்கும் மாநதிகள் போல்
அலையில் தோன்றி அழகுமலரில் நின்று
அனைவருக்கும் அருளிட அமுதாக வந்ததேவி
கலையாகி கண்களில் கடைக்கண் அருள்காட்டி
கரங்களில் கமலமும் கொட்டும் கனகமும்
நிலையாக தந்தெமை நித்தியம் காத்திட
நல்வெள்ளியில் நயமாக நாடிவருவாய் வரலட்சுமியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக