சரணமென உன்திருவடி தேடி
வந்தவர்க்கு
சுனையாகி விரும்பிய வரம் தருபவனே
கரையிலா கருணைக் கடலாகி
வந்தவனே
காசினியில் ஒளிவீசும் குளிர் நிலவே
மறை போற்றும் ஹரிஹர புத்திரனே
மூவுலகு ஏற்கும் தலைவனான சாஸ்தாவே
நிறைவாக நெஞ்சமதில் தினமும்
போற்றுகிறேன்
நீக்கிடும் எல்லாத் துயர்களையும் நின்னருளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக