வியாழன், 19 மார்ச், 2015

நாடிவரும் சூரியனே!



வானில் வலம் வருகின்ற விரிசுடரே
  வளர்கின்ற இரவுபகல் விளைவிக்கும் கதிரோனே
தேனாக நாள்கடக்க தேரில்வரும் தூயவனே
  தேன்மழை பொழிய திரள்மேகம் தருவோனே
வானில் மலைமுகட்டில் வளர்அலை கடலில்
  விடியலில் செவ்வானில் விழித்தெழும் உதயமே
தானிலா சக்தியாக தனித்தியங்கும் ஆதித்யனே
  தவழும் அண்டத்தில் தன்னிகரிலா நாயகனே
நானிலத்தில் நீயின்றி நிலைபெற்ற சக்திஏது?
  நல்லுயிர்கள் தாம்வாழ நாடிவருக சூரியனே!

1 கருத்து:

  1. what is the meaning of "தானிலா சக்தியாக தனித்தியங்கும் ஆதித்யனே" "தானிலா" Name Meaning

    பதிலளிநீக்கு