அஞ்சாத கண்ணகியே ஆற்றுக்கால்
பகவதியானாய்
அழகான அனந்தபுரம் ஆற்றுக்கிள்ளிக் கரையினிலே
கொஞ்சம் தங்கிட கோலமிகு
தேவியானாய்
கருவறைச் சிலையினிலே கனகரத்தினம் பூண்டிருப்பாய்
அஞ்சும் பூத வடிவபெண்மேலே
அழகாக அமர்ந்திருப்பாய்
ஆதிசங்கரர் யந்திரத்தில் அமைதியாகி சாந்தமானாய்
வஞ்சியுன் கைகளிலே விரிசூலம்
கத்திகேடயம்
வாரித்தரும் அட்சயபாத்திரம் வளம்தர தாங்கியிருப்பாய்
நெஞ்சுருகி பொங்கலிட்டு
நங்கையர் கூடிடுவார்
நலம்தந்து அவர்வாழ நாளும் காத்திருப்பாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக