ஐந்தலை நாகம்தான்
அலைகடலில்
அடுக்கிய அரவணையில் வீற்றிருப்பாய்
செந்தாமரை
கரங்களால் சேவடி பிடித்திடும்
செந்தூர வடிவான ஸ்ரீதேவியுடன்
சிந்தை கனிய
சேவிக்கும் கருடனுடன்
சுதர்சனமோடு சங்கமும் இணந்த கரங்களோடு
உந்தியில்
எமும் உலகாக்கும் பிரம்மனோடு
உளமகிழ்ந்து எமைகாக்க எழுந்தருளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக