பஞ்ச முகங்கள்
பரிதியெனத் துலங்க
பூசிய திருநீரும் சந்தணமும் விளங்கும்
குஞ்சரமே பத்துக்
கரங்கள் அருளும்
குழைந்து ஒம் வடிவாகும் தும்பிக்கையானே
மூஞ்சூறு வாகனனே
மோதகம் விழைவோனே
மறைபொருளே முதன்மைத் தெய்வமே
தஞ்சம்என என்றும்
உன்திருத்
தங்கப்பாதம் சரணடைந்தேன் அருள்வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக