செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பாலகுமாரா!



ஆறு முழுமதிகள் முகமாக மலர்ந்திட
  அழகிய பன்னிரண்டு விழிமலர்கள் ஒளிவீச
மருவிலா ரத்தின குண்டலங்கள் ஆடும்
  முன்செவிகள் ஈறாறு முன்னோக்க
திருவான திருக்கரங்கள் பன்னிரண்டும்
  தகைவான தாமரைமலராக மலர்ந்துவர
அருவியென முப்புரிநூல் பவளமேனியில் ஒடிவர
  ஆடையும் அணிகலனும் அரைஞான் மணிகளும்
பெருவினை அகற்றும் பாதகமலங்கள் சரசரக்க
  பேரழகாய் உருவாகி வரும் பாலகுமாரா
ஒருசொல் நானறியேன் உன்னழகை பாடிடவே
  ஒதும் மறைபொருளே ஒடிவந்து காப்பாயே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக