சரவண பவனே
செந்தூரின் சண்முகனே
சூலத்தான் திருமகனே சூரனை வென்றவனே
அரவம் மிதித்து
ஆடுகின்ற மயிலாக்கி
அழகிய கொடியில் அகவும் சேவலாக்கி
பரவும் கடலருகே
பரம்பொருளாகி நிற்பவனே
படையும் திருவேலும் பாங்குடன் தண்டமும்
கரம்தொட்டு
உமா தேவி கொஞ்சும் கார்த்திகேயனே
குறமகள் வள்ளியோடு குலமகள் தேவயானையோடு
விரதசஷ்டி
நாயகனே விரும்பிவரும் அடியார்க்கு
வரம்தந்து காத்திடும் வெற்றிவேல் முருகனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக