நடமாடும் ராஜனே நற்கையில்
அக்னி
நாடும் ஞானத்தின் நற்குறியீடு அன்றோ
உடனிருந்தே உள்ளே உயர்கின்ற
ஞானத்தீ
உனக்கே காட்டிடும் உயர்ந்தவன் தரிசனம்
கடவுள் தொழிலாம் ஆக்கல்
காத்தல் அழித்தல்
கனிகின்ற அவன்கை தீச்சுடர் காட்டும் அழிவை
மூட அறியாமைக் காட்டை முன்னின்று
சுடும்
முன்னே எரிகின்ற கற்பூரம் மொழிகின்ற சாட்சி
நடமாடும் பெருமானே நமக்கே
உறுதிதந்து
நம்பியவரை நான் நாளும் காப்பேன் என்று
சுடர்விடும் நெருப்பு சத்தியம்
செப்பும்
சன்னதியின் வாக்குறுதி இனி என்ன வேண்டுமோ
நடமிடும் பாதங்கள் நானிலத்தின்
மகிழ்வை
நாடகமாக்கிடும்
ஆனந்தநடனம் நமக்கே காட்டிடுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக